வேலை

செல்வத்தின் பயனால் உழைக்காமல் வாழ்வில் உண்டு கொழுத்து
உறங்கி களிக்கும் அட்டைப் பூச்சிகள்!
அழகான வாழ்வில் அழுது வடியும் அசிங்க கழிவுகள்!

வேலை என்பதே நேரம் போக்கும்
நியமக் கர்மம்!
நிம்மதி காண்பதின் நேரச் செலவு!

சாவின் நிகழ்வை
அறிந்தவர் யாரிலர்!
சண்டையும் கோபமும்
சாதனையாம் அறிவிலர்!

காந்தியின் கஷ்டத்தை உண்மையின் நேர்மை என்பர் பலர்!
கட்டு நோட்டுக்காய் கபடமாய் நேசம் என்பர் சிலர்!

கல்வியும் காசாய் விலை போகும்!
கலியுக நியாயங்கள்
காற்றில் பறக்கும் கருப்புப் பணமாகும்!

எழுதியவர் : கானல் நீர் (1-Jan-16, 7:40 pm)
Tanglish : velai
பார்வை : 93

மேலே