நிழல் யுத்தம்
தொடர்ந்து உடன் அலைந்த நிழல்,
ஒளிந்துகொண்டது இரவுக்குள்,
அங்கே எண்ணம் எடுத்தமுடிவு,
நீ எனை பிரிந்தாய் என்பது..........
நிற்க........
இது என்னுள் முளைத்த முடிவு.......
இலைகள் உதிர்ந்துவிட்டால்,
மரங்கள் மொட்டை எனும் முதிர்ச்சி......
அங்கே.........
என் அறிவை எடைபோட...........
இயற்கையே இனிய வெளிப்பாடு...........
அது சொல்லும் மீண்டும் துளிர்த்து,
அற்பனே,
நான் உனக்கு அப்பன் என்று...........
என்றாலும்,
விதிமீறும் செயசெயல்களுக்கு,
விளக்கங்கள் வலுவாய் வைத்திருப்பேன்..........
நான் கானகம் அழித்த மாமனிதன்...........
எல்லாம் தெளிந்தும்,
மனச்சாட்சி விழித்துக்கொள்ளாத நிலை,
என்ற ஐயப்பாடு உனக்கு வந்து,
எனக்கென பரிதவித்தால்,
நீ பாவியினும் அப்பாவி..........
மனச்சாட்சி என் உள்ளே வாழும் மாமிருகம்..........
அதன் பசிக்கு உணவே தவரெனும் செயல்பாடுகள்.........
உணர்ந்தே உயிர் அழிப்பேன் நான்.......
உலகை என் பார்வைக்கு சிருஸ்டித்தபடி..............
முட்டாளல்ல நான்............
என்றாலும்...........
எதுவோ அரிக்கிறது மனதை............
என் தலைமுறைக்கு கொள்ளிவைக்கிறேனோவென.......