இறைவன் குழப்பவாதி
காதலின் சூட்சமம் யாவரும் அறிந்ததே...!
வெற்றியோ தோல்வியோ
ஏமாற்றமோ ஏகாந்தமோ
எரிச்சலோ........
காதலின் சுகந்தம்
யாவரும் உணர்ந்ததே...!
இறைவன் படைப்பில்
காதலையும் இயற்கையையும்
ரசிக்கும் என்னை
புதுமைவாதி என்கிறான்....
இடையில் வந்த சாதியை
ஆராதிக்கும் அவனை
பழமைவாதி என்கிறான்....
பித்தன்....
ஒருவேளை நானோ....
இதுவும் பரிணாம நாகரீக
வளர்ச்சியின் ஒரு அங்கமாய்
இருக்க கூடும்....
யார் கண்டது..??
எனினும் உலகம் உருண்டை தானே..??

