அகநானூறு தமிழர்

எட்டுத்தொகையி லோர் மா ணிக்கம்
என்று மெங்கள் அகநானூறு என்றறிக
நெஞ்சு மயக்கும் நானூறு கானம்
அக வாழ்வை அலை கடலாய்.
பதின் மூன்றடி சிற்றின்பம் சிறகடிக்கும்
முப்பத் தொன்று பேரின்பம் பெருங்கடல்
நூற்று நாற்பத்தறுவர் பெற்ற பிள்ளை
பெரும்புக ழுடைத்தே தரணி தவழ.
அறுபத்தவைர் இது மட்டும் பாட்டுவைத்தே
பெய ரறியா கவிஞர் மூவர்
எது கொள்ளா சிறப்பு கொண்டதே
நூல்தொகு கணிதறிவு மிகு தமிழர்
ஒற்றைப்படை பாடல் கண்டே பாலை
பத்தென முற்று வனவே நெய்தல்
நான்கு முடி வனவே முல்லை
இரண் டெட்டனவே முடிபுற குறிஞ்சி
ஆறென இறுதி கொள்ள மருதமென்றே
எண் கணிதத்தின் காட்டாய்த் தமிழர்
பலதரப்பும் பாடல் புணைந்தே இங்கு
முப் பகுப்பு டைஅக நானூறு
அணிவகுப்பு யானைபோல் ஒரினைப் பாடல்
உறை, முதல் நூற்றிருபது களிற்றியானைநிரை
அது தொடர் முந்நூறு முற்று
பெயரே மணிமிடைப் பவளம் ஏன்
பாடல் நூற்றெண்பது நீல மணி
செந்நிறப் பவளமாய் பெரு மதிப்புடையே
கடைநூறு பெற்ற நித்திலக் கோவை
நித்தில முத்தாய் சிறப்பு மிகுவே
பழ் ஊரும் பல காண
அரங்கம் கோடி மதுரை அலவாய்.
சொல்லும் பதினான் நாட்டுப் பிரிவு
தமிழர் கடவுள் கண் காண
நடுகற் கடவுள் செல்லூர்த் தெய்வம்
புகார்த் தெய்வம் பாழி அணங்கு
சங்கத் தமிழர் விழா பார்க்க
உள்ளி விழவு உறந்தை விழவு
பங்குனி விழவு பரங்குன்ற விழவு
கூடல் விழவு இன்னும் தொடர்
விளக்கும் பற்பல தொல் போர்க்களம்
பரதவ பெண்டிர் மீன் விற்று
மாற்று பொருள் ஈண்டு வர
உமணப் பெண்கள் வண்டி யோடே
ஊர்பல சென்றே உப்பு விற்றே
மீனுக்கு மாற்றாய் செந்நெல் பெற்றே.
மனையாள் கொண்ட இல்லறக் கடமை
கருத் தொத்து விட்டுக் கொடு
கணவன் மனைவி,உறவு நல்லறம்
பண்பு கடமை குறிக்கோள் ஒலிக்க.
அறவழி பொருள் அழிந்து போகா
பழிவழி செல்வம் நினைப்பு வேண்டா
விருந்தோம்பல் பண்பு விளக்கி நிற்க
உறவினர் இன்புற இன் விருந்தளி.
பெண்பாற் புலவர் பன்னிருவர் இங்கே
பாட்டடியால் சிறந்தோர் மூவ ரிங்கு
தொகுத்தார் உப்பூரிகுடி கிழான்மகனார் உருத்திரசன்மர்
தொகுப்பித்தார் பாண்டிய ரச உக்கிரப் பெருவழுதி.
. ******செல்வா முத்துச்சாமி******