புதிர்கவிதையிவள் 2
நிச்சயமாய் இவளோர்
புதிர்கவிதை தான்
கானலாகிய
நிதர்சனங்களில்
தொலைந்து போன
வாழ்க்கையில்..!!
வரண்டு போன
வார்த்தைகளை
கோர்த்து கவிகளில்
ஒரு விதி செய்கிறாள்..
நினைவுகள்
முடிவதில்லையென..
விதி வழியில்
நதியாகி போனாள்..
தனிமை கடலுக்கு
பலியாகி போனாள்..!!

