நெசந்தான்

அந்த நீர்ப்பரப்பு
ஆழகானது
அதன் அசைவு
எனக்குப்
பிடித்திருந்தது.
எப்போதும்
கரையில் தூர
இருந்து
பார்த்துக் கொண்டே
இருப்பேன்.
கால் நனைத்தது
இல்லை .
சில நேரம்
அதன் அலைகளின்
நகர்வுகள்
ஆக்ரோஷமாக இருக்கும்
அதனால் சற்றுப் பயம்
அருகில் செல்வதில்லை
ஏரியா கடலா
அதுவும்புரியவில்லை
மெய்த் தோற்றம்
அறிய
ஏதோ ஆர்வத்தில்
கல் எறிந்து
பார்த்தேன் ..
நெசந்தான்
எறிந்தகல்
உருவாக்கிய
நீர்வட்டம்
இன்னுமொரு
குளத்தில்
புரிய வில்லை ..
இந்த ஊரெல்லாம்
குளங்கள் தானோ
எதுவாயிருந்தாலும்
இனிக்
கல் எறியமாட்டேன்..

எழுதியவர் : சிவநாதன் (5-Jan-16, 9:14 am)
பார்வை : 134

மேலே