மூன்றெழுத்து --முஹம்மத் ஸர்பான்
கரு தந்த அம்மா மூன்றெழுத்து.
***தோள் தந்த அப்பா மூன்றெழுத்து.
இதயத்தில் கருதந்த காதலி மூன்றெழுத்து.
***உணர்வுகளில் கலந்த மனைவி மூன்றெழுத்து.
இல்லறத்தால் பிறந்த பாப்பா மூன்றெழுத்து.
சாகும் வரை எம்மோடு விரும்பியும் விரும்பாமலும்
***பயணிக்கும் நிழல் மூன்றெழுத்து.
பண்பு தந்த ஆசான் மூன்றெழுத்து.
***பட்டம் தந்த கல்வி மூன்றெழுத்து.
என்னுயிரில் கலந்த தமிழ் மூன்றெழுத்து.
வாழ்க்கை உணர்த்தும் தோல்வி மூன்றெழுத்து.
**பாதை பயணம் மாற்றும் வெற்றி மூன்றெழுத்து.
தமிழ் தந்த கவிதை மூன்றெழுத்து.
***தோள் தந்த தோழன் மூன்றெழுத்து.
நிம்மதியாய் தூங்கும் கப்று மூன்றெழுத்து.
***எம்மோடு வரும் நன்மை,பாவம் மூன்றெழுத்து.
கல்லறைப்பயணத்தில் சுவன,நரக யாத்திரை மூன்றெழுத்து.
***மனிதன் பிறந்ததிருந்து இறக்கும் வரை எல்லாம் மூன்றெழுத்தே!