இருந்தால் நல்லது

கைத்தொலைபேசி கலாச்சாரத்தில் புரிந்துகொள்ள வேண்டியது ...
அகற்றப்பட வேண்டியது....
மக்களிடத்தில் இருந்து மட்டுமல்ல ..
நம் மனதில் இருந்தும்....
தேர்வில் வெற்றியென்றால் புகைப்படம் ...
தேர்வில் தோல்வி அடைந்தாள் புகைப்படம் ...
பிச்சைகாரன் பிச்சை எடுத்தால் புகைப்படம் ...
பிச்சை போட்டதை ஊருக்கு எடுத்து சொல்ல புகைப்படம்...
வானம் பூமி இரண்டும் பார்க்காமல் ...
கைத்தொலைபேசியில் மூழகடிக்கும் புகைப்படம்..
முன் வருபவன் யார் என்று பின் இருப்பவன் யார் என்றும் ...
கவலைப்படாத போதையில் மூழ்கடிக்கும் தொலைபேசி ...
உண்ணும் பொருளில் கலப்படம் ...
அதில் உன்னும்பொழுதும் கண்ணை கவனத்தில் ஈர்த்திடும் தொலைபேசி ..
பிச்சைக்காரன் புகைப்படத்தில் கவனம் அதிகம்...
பிச்சைக்காரனுக்கு அதில் கிடைப்பது அடுத்தவர் விருப்பமும் பகிர்வும்...
கொலையை நேரில் காட்டும் கைப்பேசி...
கொலை செய்தவனை படம்பிடிக்கும் தொலைபேசி ...
கையை உடைத்தாலும் கவலையில்லை ..
கை தொலைபேசி இல்லாமல் வாழ்க்கை இல்லை ..
படித்து முன்னேறுவதில் கவனம் குறைக்கும் தொலைபேசி ...
படிக்க முடியாமல் தடுமாறச்செய்யும் கை தொலைபேசி ..
தன்னுடைய நினைப்பை மறந்து ...
பெற்றவர்களின் நினைப்பை மறக்கச்செய்யும் கை தொலைபேசி ...
விபத்தில் இறக்கப்போகும் மனிதனை மறைத்து..
அவன் இருதயம் துடிப்பதை படம் பிடிக்கச்செய்யும் கில் தொலைபேசி ...
தன்னுடம் அருகில் இருக்கும் உறவுகளை மறந்து ...
பல மையில்கள் தூரத்தில் முகம் தெரியாதவரிடம் பேச சொல்லும் கை தொலைபேசி ...
இயற்க்கை கொடுத்த அழகை மறைத்து ..
செயக்கையில் வாழ சொல்லும் கை தொலைபேசி ...
அழகிய தன குழந்தை அருகில் இருக்கும் போது...
அடுத்தவர் குழந்தைக்கு விருப்பம் தெரிவிக்கும் கை தொலை பேசி...
உன்னால் நாங்கள் இழக்கப்போவது என்னவென்று சொல்வதற்குள்...
எழுந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை ...
தொலைவில் இருப்பவர்களிடம் பேச உதவி செய்யும் நீ ...
அருகில் இருப்பவர்களுக்கும் அவ மரியாதை செய்யாமல் இருந்தால் நல்லது...