ஓட்டை முகமூடிகள்

ஓட்டை வாய்கள் எதையும்
ஒளித்து மறைத்து பேசுவதில்லை!
உணர்ச்சியின் வேகத்தில்
உறைத்திடும் வார்த்தைகளில் யாருக்கும்
உலை வைப்பதில்லை
உண்மையின் உறைவிடம் இவர்கள்!
ஆனால்
ஓட்டைகள் நிறைந்த முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு
வேண்டாத நேரங்களில்
வெளியிடும் புன்னகையும்
வேடிக்கை வார்த்தைகளும்
திரித்து பேசும் பேச்சும்
வெளியிட்டு விடும் மனங்களின்
வன்மங்களையும்,நடிப்பையும்!
மனத்தால் சிரி்ப்பவன்
இதழ்களாலும் சிரிப்பவன்
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவதில்லை
அகம் மலர்ந்தால்
முகம் மலர சிரிக்க முடியும்
சிரிப்பிலும்,வம்பிலும்
ஓட்டை முகமூடிகள்
உடைத்துவிடும் உண்மைகள்!