கனவை சிதைக்காதீர்

குழந்தை பருவத்தில் ஏதும் புரியா
மழலை நிலையில்,
எப்போது பசிக்கும் என அறிந்து
பால் ஊட்டிய பெற்றோருக்கு,

தவழ்ந்து நிற்கும் வயதில்
கை பிடித்து நடக்க வைத்த
பெற்றோருக்கு,

தன் சௌகரியம் தவிர்த்து
குழந்தை நலன் பார்த்து
கண் விழித்து காத்த பெற்றோருக்கு,

எந்த பள்ளியில் சேர்த்தால்
நல்லறிவு, நல்மதிப்பெண் பெறுவீர்கள்
என்று, தன் உடல் வருத்தி
பொருள் சேர்த்து
பள்ளி சேர்த்த பெற்றோருக்கு,

எந்த கல்லூரியில் சேர்த்தால்
உடன் பணி என்று அறிந்து,
மதிப்பெண் குறைந்திருந்தாலும்
பல லகரம் கொடுத்து
நல் கல்லூரி சேர்க்கும்
பெற்றோருக்கு,

எப்பாடு பட்டாவது
நல் பணி பெற்று தரும்
பெற்றோருக்கு,

நல் வாழ்க்கை அமைத்து தர
தெரியாதா?

இறகு முளைத்தவுடன்
காதல் என்ற பெயர் சொல்லி,
பெற்றோர் மனம் சிதைத்து,
தவறான பாதை பறந்து
முள்ளில் மாட்டி இறகை
ஒடித்துக்கொள்ளாதீர்.........

பெற்று, நல் முறையில் வளர்த்து
நற்கல்வி கொடுத்த பெற்றோருக்கு
நல் வாழ்க்கை அமைத்து கொடுக்க
ஆயிரம் கனவுகளோடு மிதப்பார்கள்!

பெற்றோர் கனவை சிதைக்காதீர்கள்!
காலம் போற்றும் பிள்ளைகளே!

எழுதியவர் : அர்ஜுனன் (5-Jan-16, 6:18 pm)
பார்வை : 105

மேலே