சொப்பனம்
வானவில் வண்ணங்கள்
என் வாழ்க்கைக்கு
வண்ணந்தீட்ட
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகள் என்னோடு
ஒட்டிக் கொள்ள
பூக்கள் எல்லாம்
என் தோழிகளாய்
சேவை புரிய
சிட்டுக்குருவிகள்
தன் கூட்டில்
எனை குடியேற்ற
நான் துயில்
கொள்ள தென்றல்
இசை மீட்ட
நான் குளிக்க
பனித்துளிகள்
நீரூற்ற
தலை துவட்ட
வெண்முகில்கள்
இறங்கி வர
துயில் நீங்க
தேனீக்கள்
தேநீர் வழங்க
வண்ணமகன்
பெண் கேட்டு
தூதனுப்ப
நாணமது
தாங்காமல்
நான் நெளிய
கூடிதிரிந்த
சொறிநாயின் உறுமலால்
சொப்பனத்திலிருந்து மீண்டுவந்தேன்
நரகவாழ்க்கைக்கே.....