சும்மா, நினைக்க தோனுச்சு, தப்பா
பாம்பாட்டி வித்தைக்காரர்
குடுகுடுப்பைக்காரர்
சாட்டையால் அடித்துக்கொள்பவர்
கிளி ஜோசியக்காரர்
இவர்களுக்கெல்லாம்
போதிய வருமானமில்லை
மதிக்க யாருமில்லை
நாகரீகமுமில்லை ..
இருந்தாலும்..
விடாமல் இதையே கட்டி
மாரடித்துக்கொண்டிருக்கிறார்களே..
இவர்களை பார்த்து
சில நேரம் எனக்கு
''அறிவிருக்கா ?''என கேட்க தோன்றியிருக்கிறது.
ஆனாலும்,
குலத்தொழிலை கேவலப்படுத்தி விட்டதாக
அவர்களில் யாரேனும் கோப படக்கூடும் என்பதற்காக
அவைகளை வேடிக்கை பார்ப்பதோடு
நான் விட்டுவிடுவதுண்டு.