வா வந்துவிடு

இமையமலை சாரலிலே
என் மனது அலைகிறது
இறையருளை சுற்றி சுற்றி
என் கண்கள் நனைகிறது
குளிரான ஆசையெல்லாம்
குறையாத ஆடைக்கொண்டு
போர்த்தி கிடக்கும் எலும்புடலை
பொறுக்கவில்லை ஞான வேட்கை
மலைமீது சூரியனாய்
மறைந்து கிடக்கும் ஆறிருளை
தலைமீது தாங்கிக்கொண்டு
தன விதியேது புரியாமல்
வெளிச்சமின்றி வெட்ட வெளியில்
வெட்கமின்றி சுட்ட ஒளியாய்
எத்தனை காலம் நானிருப்பேன்
இல்லையில்லை காலத்திலேயே
காத்திருப்பேன்

எழுதியவர் : . ' .கவி (12-Jun-11, 1:42 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 352

மேலே