அக்பர் பீர்பால் கதைகள்

இயற்கை எழில் கொஞ்சும் அழகு பசி பஞ்சம் வறுமை என்புதே இல்லா செழிப்பு மிகுந்த தேசம் ,அது அக்கபரின் தேசம்,

அக்பர் தனது ராஜ்யத்தை விரிவு படுத்தி ஒரு பேரரசை உருவாக்க எண்ணிணார்,இதனை பீர்பாலிடமும் கூறினார்,

இதன் படி சுற்றி இருக்கும் நாடுகளின் மீது போர் தொடுத்து அதில் வெற்றி மேல் வெற்றியும் கண்டார் ,அக்பரின் ராஜ்யம் பெரிதாகிக் கொண்டே போனது,

அக்பர் பல நாடுகளை வென்று அவைகளை தனது ராஜ்யத்தோடு இனைத்துக் கொண்டே போனார்,

இருந்தும் அக்பரால் கலிங்க நாட்டை மட்டும் கைப்பற்ற முடியவில்லை,

கலிங்க நாட்டின் மீது அக்பர் ,பீர்பால் மற்றும் படைவீரர்களுடன் படையெடுத்தார் ,அதில் கலிங்கமே வென்றது அக்பர் தோல்வி கண்டார்

மீண்டும் அக்பர் பீர்பாலுடன் படைவீரர்களுடன் படையெடுத்தார் மீண்டும் கலிங்கமே வென்றது அக்பர் தோல்வியுற்றார்,

மீண்டும் ,மீண்டும் என அக்பர் பல முறை கலிங்கத்தின் மீது படையெடுத்தார் மீண்டும் மீண்டும் கலிங்கமே வென்றது,

அக்பர் பெரும் வேதனை கொண்டார்,

கடைசியாக கலிங்கத்தின் மீது அக்பர் படையெடுத்த போது அக்பரின் உயிருக்கே ஆபத்தாகி விட்டது ,எப்படியோ அக்பரும் பீர்பாலும் போர் களத்தில் இருந்து தப்பி வந்து விட்டனர்,

வரும் வழியில் அக்பருக்கும் ,பீர்பாலுக்கும் பயங்கர பசி ,தூரத்தில் குடிசை ஒன்று தென்பட்டது ,உள்ளே மூதாட்டி ஒருவர் இருந்தார்

இருவரும் மூதாட்டியிடம் பாட்டி எங்களுக்கு ரொம்ப பசிக்கிறது உணவு இருந்தால் கொஞ்சம் கொடுங்கள் என்றனர்

வந்தது அரசரும் அமைச்சரும் என்று தெரியாத மூதாட்டி சட்டியில் சூடாக இருந்த சோற்றை தட்டில் இட்டு இருவரிடமும் கொடுத்தார் ,

பசி தாங்கமல் அக்பர் சோற்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்,சோறு சூடாக இருந்ததால் கையுடன் சேர்த்து அக்பர் தனது நாவினையும் சுட்டுக் கொண்டார்

அதற்க்கு மூதாட்டி கோபமாக அக்பரிடம் முதலில் தட்டில் கொட்டி வெச்ச சோற்றை சுற்றியுள்ள சோற்றை அருந்த வேண்டும் பிறகு தான் மெது மெதுவாக உட்சோற்றை அருந்த வேண்டும் அப்போது தான் சுடாது என்றார்

மூதாட்டியின் சொல் கேட்ட அக்பர்க்கு அப்போது தான் புரிந்தது ,முதலில் கலிங்கத்தை சுற்றியுள்ள கலிங்கத்தின் வலுவான குறுநில நாடுகளை கைப்பற்ற வேண்டும் பிறகே கலிங்கத்தின் மீது போர் தொடுக்க வேண்டும் என்பதனை உணர்ந்தார்

தனது யோசனையை பீர்பாலிடமும் கூறி அதே போல் முதலில் கலிங்கத்தின் ஆதரவான கலிங்கத்தின் குறு நில நாடுகளின் மீது போர் தொடுத்து கைப்பற்றினார் ,பிறகு கலிங்கத்தின் மீது போர் தொடுத்து வெற்றியும் கண்டார் அக்பர்,,

அக்பர் நினைத்தது போலவே பேரரசை உருவாக்கினார்,

இதற்க்கு காரணமாக இருந்த மூதாட்டிக்கு அக்பர் பொற்காசுகளும் பொருட்களும் அள்ளித் தந்தார்,,

எழுதியவர் : விக்னேஷ் (6-Jan-16, 4:37 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 283

மேலே