நான் கண்ட காட்சிப்பிழை

பருவ வயது வாலிபன் நான்
உருவத்தில் நானொரு கதாநாயகன் போல
இருப்பேன்!

வாலிபக் கனவுகள் எனக்கும் உண்டு,
என் வீட்டை அடுத்த தெருமுனையில்
இருந்தாள் ஒரு தேவதை!

கூந்தலோ நெளிநெளியாய் கருப்பு
செவ்விதழோ கொவ்வைச் செவ்வாய்
கேட்கவும் வேண்டுமோ காதல் கொள்ள!

நானுமவள் மேல் கொள்ளையாய்
காதல் கொண்டு அவள் வீட்டையே
சுற்றிச் சுற்றி வந்தேன்!

தேவதையின் கடைக்கண் பார்வை
என்மீது பட்டது சிலபல பொழுதுகளில்;
அடிக்கடி சந்தித்தோம்!

வேலையேதும் இன்றி சுற்றித் திரிந்த
என்னை அவள் வீட்டார் ஏற்றுக் கொள்வரோ?
எனவே பட்டணம் போனேன் வேலை தேடி;

வேலை தேடி அலையாய் அலைந்து
வந்த வேளையிலே இடியெனச் செய்தி
அவளுக்குத் திருமணமாம் அடுத்த வாரம்!

இரண்டு மாதங்கள் சென்றிருக்கும்
நல்ல வேலை கிடைத்து அம்மாவிடம்
சொல்ல எங்களூர் மதுரை வந்தேன்!

புதூர் சர்வேயர் காலனியில் குடியிருக்கும்
அவளை கண்டு வாழ்த்தச் சென்றேன்1
ஐயோ! அவள் கணவன் குடிகாரன்!

வயதிலும் மூத்த நாற்பது வயதைத்
தாண்டிய நரைவிழுந்த முதியோன்!
குரங்குகைப் பூமாலை யவள்!

நான் கண்ட காட்சிப்பிழை!
யார் செய்த தவறிது? காதலித்தும்
வேலையில்லா என் பிழையே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jan-16, 9:21 pm)
பார்வை : 449

மேலே