ஆசானே ஆசானே

அதிகாலை விழித்தெழுந்து
சனி நீராடுவதாய்
பனிநீராடி முக்கியெழுந்து
இறைவன் முன்பாய் கரங்களேந்தி
சுவாசப்பயிற்சி ஆழ்ந்த தியானம்
அதிலே மூழ்கி நிம்மதிக்கொண்டே
நிமிர்ந்து பார்த்த ஆசானே !
இன்று எங்கு போனீர் ஆசானே !!

ஆசையோடு அழைத்தேதான்
அன்போடும் பார்த்தேதான்
முகவரிதேடி வந்தோற்க்கெல்லாம்
முக்கியமளித்து போதிப்பீரே
இறைபக்தி முடித்தும்தான்
இரையுண்ண வைப்பீரே –அதனை
வியந்து பார்த்த ஆசானே !
இன்று எங்கு போனீர் ஆசானே !!

மனம் நிறைந்த மனதோடே
தப்புதண்டா செய்தாலும்
உப்புப்பளிங்கு மணலெல்லாம்
மண்டியிட சொல்வீரே அதிலும்
மரணவேதனைக் கொள்வீரே பிறர்
முக்திபெற நல்வழி பார்த்த ஆசானே !
இன்று எங்கு போனீர் ஆசானே !!

தன்னலமில்லா போதனையிலே
தனித்துவம்பெற்ற மானிடனாய்
அறிவைகொண்டு ஆழமாய்
சிந்தனை பழக தூண்டிடுமே
கேள்விஞானம் வேண்டி பார்க்த ஆசானே !
இன்று எங்கு போனீர் ஆசானே !!

அகிலம்போற்றும் பாரதமே
குருவென்றால் துரோணர் என
அகிலம் அங்கே போற்றிடவே
குருவின் தன்மை எதுவென்று
கிருஷ்ணன் நாமம் உணர்த்தினவே
குருவாய் வாழ்ந்து பார்த்த ஆசானே !
இன்று எங்கு போனீர் ஆசானே !!

தேடுகிறேன் ! தேடுகிறேன் !! குருவை அன்றி தேடுகிறேன் !!!
பட்டம்பல பெற்றாலும் ஆசான் பொருள் அறிந்திடவே
தேடுகிறேன் ! தேடுகிறேன் !! ஆசான் ஒருவரை தேடுகிறேன் !!!

*****************தஞ்சை குணா*************

எழுதியவர் : மு. குணசேகரன் (7-Jan-16, 10:41 am)
பார்வை : 4509

மேலே