பூத்தது காதல் பேசுது கண்கள் புதிதாக முயற்சித்த பாடல்

பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் இதய துடிப்பையே....@ஆண்


பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் மூச்சு காற்றையே...@பெண்


கண்ணிலே காதல் காட்சி காட்டி சென்றாய் என்தன் கள்ளியே....@ஆண்
கை விரல் கோர்திடு உன்னை தந்திடு என்று ஜாடை காட்டி சென்றாய் எந்தன் கள்வனே ....@பெண்
நானும் அடிமையாகி போகிறேன்... உன் கூட வருகிறேன் உன் பேரை சொல்லியே....@ஆண்
உன்னை பார்த்ததும் சிலையாய் நிற்கிறேன்.... பின் கனவிலும் கரைகிறேன் உன் கை விரல் பட்ட உணர்வால்.....@பெண்
என் வாழ்நாளெல்லாம் உன் நிழலாய் நான் வாழ்ந்திட வேண்டும்....@ஆண்
நானும் உன் வாழ்நாளெல்லாம் உன் கைரேகையாய் வாழ்ந்திட வேண்டும்.....@பெண்

உனகென்று வருகிறேன்.....
எனக்கென்றும் நீ தான டிடிடீ...
எந்தன் ஆழகியும் நீ தான் டிடிடீ....
எந்தன் உலகமே நீ மட்டும் தான் டிடீ கள்ளி ....@ஆண்

.......................
நானோ உன் நினைவினில் பறக்கிறேன்.... தனிமையில் சிரிக்கிறேன்.... உன் பேச்சினில் சில்லென்று சிலிர்கிறேன்.....@பெண்

நானும் உன்னை பார்த்தும் என்னை மறக்கிறேன்.... மீண்டும் பிறக்கிறேன் சிருபிள்ளையாக.... நீயோ என்னை தாங்கிட நானோ உன்னில் தவழ்ந்திட வேண்டும் ..@ஆண்

பெய்யும் மழையில் நீயும் நானும் ரசித்து நனைந்திட.... நம்மை கண்டு அந்த பூவும் புல்வெலியும் வெட்கத்தில் சிரித்திட வேண்டும்......@பெண்

அந்த நில ஒளியில் உன் முகம் பார்த்து நான் ரசித்திட.... நீயோ நம் காதலை எண்ணி பாடல் பாடிட..... நம் இதய துடிப்போ தாளம் போட்டிட வேண்டும்....@ஆண்

உனக்கென்று இருக்கிறேன்....
எனக்கென்றும் நீ தான டா...
என்தன் உயிரும் நீ தான் டா...
என்தன் உரவும் நீ மட்டும் தான் டா கிருக்கா....

பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்ம்......@ஆண் & பெண்

எழுதியவர் : கனி (10-Jan-16, 11:41 am)
பார்வை : 449

மேலே