உன் எதிர்காலம்

உன் எதிர்காலம் !
கூண்டை விட்டு
வெளியே வருகிறது
ஜோதிட கிளி!
உன் எதிர்காலம்
கணிக்கவே!
கிடைத்ததோ!
ஓரிரு நெல்மணிகள்!
ஓரிரு நெல்மணிகளுக்கு
ஜோதிட கிளியின்
உழைப்புதான்
உன் எதிர்கால சீட்டு!
உனது பதில்
உழைப்பென்றால்
ஓரிரு நெல்மணிகள்
திருப்திதான்
ஜோதிட கிளிக்கு!
---- கே. அசோகன்.