கூப்பிடு
வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார்.
ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான்.
" அப்பா இருக்காரா...?"
"இல்ல... வெளியூர் போயிருக்கார்..."
" அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி,
இருக்காங்களா..?"
"அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..."
"அண்ணனையாவது கூப்பிடு..."
" அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்."
"சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..."
" அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..."
வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...? நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?'
+
+
"ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...