வெங்காயக் கண்ணீர் …1

வெங்காயக் கண்ணீர் ….1
***********************************


முகமூடியில் உக்கிரமாகவே இருக்கிறாய்.
என் பயமறியா ராட்சசி நீ.
*****

அழுதுவிடலாமென்றால்
கண்ணீர் துடைக்கும் கைதான்
என்னை
அடித்துக் கொண்டிருக்கிறது
*****

எழுத நினைத்துக்
காகிதம் எடுக்கும் நேரத்தில்
நினைவிலிருந்து தப்பிவிடுகிறது
என் கவிதைகளும்
உன்னைப் போலவே
*****

புரிந்து கொள்ளமுடியவில்லை
வலை கொண்டே எப்போதும் நீ
தண்ணீர் கொள்வதை.
*****

எப்போதும் உன் பரிசோதனைக் கூடத்திலேயே
என்னை வைத்திருக்கிறாய்
பிணக்கூராய்வுக்கு முந்தைய
மனக்கூராய்வு நடக்கிறது
இப்போது.
*****

அறுவடைக்கு முன்பே விதைத்திருக்க வேண்டும்
அன்பையும் கூட.
*****

…...ஆண்டன் பெனி.

எழுதியவர் : ஆண்டன் பெனி (13-Jan-16, 9:38 am)
பார்வை : 69

மேலே