துடிதுடித்து போகுதடி என் இதயம் 555

என்னுயிரே...

என்னைவிட்டு பிரிந்து செல்ல
நீ சம்மதம் கேட்டாய்...

என்னுயிரே உன் வாழ்வு
சிறக்குமென்று...

பூச்சொரியும் நந்தவனம்தான்
உன் வாழ்வென்று மகிழ்ந்திருந்தேன்...

உன்னை முத்தமிட்டு
கொண்டிருக்கும் வாழ்க்கை...

ரோஜா இதழ்கள் இல்லையாம்
ரோஜாவின் முட்கள்தானாம்...

என்னை காணும்போதெல்லாம்
சொல்ல பிரயாசபட்டும்...

சொல்லால் சொல்லிவிட முடியாத
உன் முகத்தில்...

கண்ணீரின் சுவடுகள் எனக்கு
மீண்டும் சொல்லுதடி...

நீ என்னை பிரிந்தபோதுகூட இப்படி
துடிக்கவில்லையடி என் இதயம்...

உன் வாழ்வையென்னி
சந்தொசம்தானடி அன்று...

இன்று நீ துடிப்பதை நினைத்து
என் இதையம் துடிதுடித்து போகுதடி...

உன் தோழி என்னை
சந்தித்ததிலிருந்து...

தினம் நாட்கள் புதிதாக
பிறப்பது போல...

உன் வாழ்வில் சந்தோசம்
பிறக்க வேண்டுமடி...

தினம் ஏறி இறங்குகிறேன்
பல கோவில்கள் உனக்காக.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (13-Jan-16, 8:12 pm)
பார்வை : 767

மேலே