அனுபவம்
அறிவு என்பது கருவியானால்
அனுபவம் என்பது அதை இயக்கும் விசையாகும்.
அறிவு உள்வாங்கப்படுவது;
அனுபவம் வெளிப்படுவது.
அறிவு இருட்டை விலக்குவது;
அனுபவம் இருளில் தெளிவுடன் நடப்பது.
அறிவில்லாதவனை வார்த்தைகள் அடையாளங்காட்டும்;
பேசாமடந்தையாய் இருந்தால்
அறிவில்லாதாவன் கூட அறிவாளியாய் தெரிவான்.
அவ்வகையில் அரசியல்வாதி சரியான எடுத்துக்காட்டு;
ஏதேதோ பேசி யார் யாரையோ புண்படுத்த அறிவாளியால் முடியாது,
ஆனால் அரசியல்வாதியால் மட்டும் எப்படி அது முடிகிறது?
அனுபவம் அறிவைக்காட்டிலும் சிறப்பானது;
அனுபவமில்லாதவனை செயல்பாடு படுத்தி எடுத்து விடும்.
அறிவு கூரான கத்தி, அனுபவம் முனை மழுங்கிய கத்தி;
அறிவை தவறாக பயன்படுத்தினால்
சுயநலம் மட்டுமல்ல, பொது நலமும் கீழ்நோக்கும்;
அனுபவம் தவறாக பயன்படுத்தப்பட்டால்
சுயநலம் சிறிது மேலோங்கி பொதுநலம் கீழ்நோக்கும்.
அறிவுள்ள சமுதாயம் அனுபவத்தை அலட்சியப்படுத்தினால்
அது தறி கெட்டு விடும்;
பயன்படுத்தாத அனுபவம் இங்கே அதிகம் புலப்பட,
பண்படாத அறிவும் இங்கே பாழ்பட
சமுதாயம் சரிப்படுதல் எங்கனம்....?

