வாய்மை

வாய்க்குள்
வறுகடலையாய் பெண்களை
வறுத்தெடுக்கும்
வஞ்சகர்கள்
நாவுக்குள் ஈரம் இருக்காது
மனத்திலும் ஈரம் இருக்காது
கடித்து துப்பிய வார்த்தைகளில்
மடிந்து போகிறது வாய்மை
முடிந்தே போகிறது வாழ்க்கை
மென்று விழுங்கும் உண்மைகள்
மெல்ல மெல்ல
பலி கொள்கிறது அபலைகளை
பூரியார்க்கு இல்லை
சீரிய ஒழுக்கம்
இது ஔவை வாக்கு
தீயோர்க்கு இல்லை எந்த
நியதியும்,நியாயமும்.