ஒரு கொலை
காமாட்சி மீனாட்சி , விசாலாட்சி
என்று பெயரிட்ட காலம் போய்
இன்று ஐஸ்வரியா தேஜச்வரி
என்று பெயர்கள் காண
பல பேருக்கு வாயில் நுழையா
தட்டு தடுமாறி ஐஸ் ,
தெசஸ் என்று சொல்ல
பொருளும் மாறி
பொருத்தமும் வேறுபட்டு
என்ன விதமான
ஒரு கொலை.