மழைச்சாரலின் மடியில்
மேகம் பார்த்து ரசிக்கும் வேளையில்,
மேளச்சத்தம்க் நான் கேட்டேன்,
கேட்ட நொடி பெரும் மகிழ்ச்சி,
கோலம் அது வானம் போட,
கோர்த்து தூவியது பூ மழையை !
துள்ளிக்குதித்து விரைந்தோடி நின்றேன்,
தூவும் அதன் வாழ்த்து மழையில்,
தூரல் என்னை மெதுவாய்த் தழுவ - அவரிடம்
தூதுப் போ என்று என் மனதிடம் சொன்னேன் !
செல்ல செல்ல சாரல் அது தழுவியதும்,
மெல்ல மெல்ல மனம் விண்ணில் பறக்க - அதை
சொல்ல சொல்ல நாளிதுப் போதாதே !
அட ! என்ன இது எங்கும் பனித்துளியாய் பூ மழைத்தூவ,
அமுதினை உண்ண வாய் சுவைக்கும் இனிமை - என்
அகம் அது உணர்ந்திடுதே !
காலம் அது காலம் எதுவாயினும்,
கார்முகில் வந்தவுடம் மறைந்திடுமே தன்னால் - அதை
கண்டவுடன் கவிப்பாடுதே நெஞ்சம்,
காணும் வையகம் யாவிலும் அவன் முகம் தெரிய,
கள்வனவன் யார் என்று ? - என்
கண்கள் அது தேடிடுதே !!!