எம்ஜிஆர் பற்றி ஒரு பழைய தகவல் - புதிய பகிர்வு

நம் மேல் உண்மையான அக்கறையும் ,பிரியமும் உள்ளவர்கள் மட்டுமே நாம் மனச்சோர்வு அடையும் தருணங்களில் நமக்கு நம்பிக்கை சாமரம் வீசுவார்கள்.

இதற்கு எம்.ஜி.ஆரின் வாழ்வை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.

எம்.ஜி.ஆர் ஆரம்பகாலத்தில் பெரிய வாய்ப்பு கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்.

அந்நேரம் நந்தலால் ஜெஸ் வந்தலால் என்றொரு வட இந்தியர் ஒரு தமிழ்ப் படத்தை இயக்குவதற்காக தமிழகம் வந்திருக்கிறார்.

கலைவாணர் அந்த டைரக்டரிடம் "இவர் ஒரு நடிகர்" என எம்.ஜி.ஆரைக் காட்டியிருக்கிறார்.

உடனே ,வந்தலால் எம்.ஜி.ஆரை நடித்துக் காட்டச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் நடிப்பைக் கண்ட வந்தலால் " Well decorated Mythological Pillar " (அலங்கரிக்கப்பட்ட புராணகாலத்துத் தூண்)என்று பாராட்டியிருக்கிறார்.

அதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தக் கண்ணீர் வழிந்திருக்கிறது. அப்பொழுது எம்.ஜி.ஆர் இருபது வயது இளைஞன் !

அருகிலிருந்த கலைவாணர் எம்.ஜி.ஆரிடம்

" உன்னைப் பற்றி அந்த டைரக்டருக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி எனக்குத் தெரிவதை விட
உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டும்
அப்பொழுதுதான் நீ வெற்றி காணமுடியும் "

என்று உத்வேகம் அளித்திருக்கிறார்.

இதன் பின் பல்வேறு போராடங்களுக்குப் பின் சினிமாவில் ஸ்திரமான ஓர் இடத்தைப் பிடித்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருடன் ஆரம்பகாலத்திருந்தே கூடவே இருந்து உற்சாகப்படுத்தியவர்களுள் முக்கியமானவர்கள் இருவர் 1) கலைவாணர் 2) சின்னப்பா தேவர்

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (16-Jan-16, 11:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 165

மேலே