கேள்விகள் என்னோடு பதில்கள் உன்னோடு 555
அன்பே...
ஓரகண்ணால் ஒழுக்கம்
பற்றி நீ பேச தலைகுனிந்தேன்...
பூக்கள் அறுப்பது பாவம் என்று
முழம் பூவை தலையில் சூடுகிறாய்...
சாமி கும்பிட சப்தம்
வேண்டாமென்று
கால்களில் கொலுசு அணிகிறாய்...
காதல் தவறு என்று பாடம்
நடத்தி காதல் செய்யவைக்கிறாய்...
அழுகை அறவே
பிடிக்காது என்று
என்னை மட்டும் ஏனடி அழவைக்கிறாய்...
கவிதை எப்போதும்
வாசிப்பேன் என்று...
என் காதல் கடிதம்
கிழித்து எறிந்தாய்...
என்னை முழுவதும்
பிடிக்கும் என்றாய்...
என் காதலை மட்டும்
பிடிக்கவில்லை என்கிறாய்...
என்னோடு சேர்ந்து நடைபோட
பிடிக்கும் என்றாய்...
என்னோடு சேர்ந்து வாழ
பிடிக்கவில்லை என்கிறாய்...
உன்னை முழுவதும்
புரிந்துகொண்டவள்...
என் வாழ்க்கை துணை
என்கிறாய்...
உன்னைத்தவிர வேறு யாரால்
முடியும் என்று தெரியாமல்...
கேள்வியும் பதிலும்
நீயே தொடுக்கிறாய்...
என் கேள்விக்கு பதில்
மட்டும் எங்கடி கண்ணே.....