நான் விதி விலக்கு

நீ
வீதி விளக்கு
சிவப்பு வெளிச்சம்
நான் விதி விலக்கு
பச்சை விளக்கு....!!!

செக்கு மாடுபோல்
உன்னையே சுற்றி
சுற்றி வருகிறேன்
உன் வேக வண்டிக்கு
நான் பொருத்தமானவன்
அல்ல ..

பிரிந்து செல்லும் நீ
திரும்பி பார்க்கவில்லை
உன் இதயம் எனக்கு
கைகாட்டுகிறது

+
கே இனியவன் - கஸல் 111

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (18-Jan-16, 6:18 pm)
பார்வை : 182

மேலே