காதலின் புனர்ஜென்மம்
எல்லா ஆண்களின் மனதிலும்
ஒரு மறுக்கப்பட்ட காதலும்,
எல்லா பெண்களின் மனதிலும்
ஒரு மறைக்கப்பட்ட காதலும்
கட்டாயம் இருக்கும்...
எழுதாத டைரிகளின்
புரியாத பக்கங்களின்
விடுபட்ட விவரங்கள்
ஞாபக விழுதுகளாய்
இதய வனங்களில்
இழையோட பெருமூச்சுக்கள்
அடங்கி கிடக்கும் சிலர்
வாழ்க்கையில் பின் ஒரு நாள்
பழைய முகங்கள் எதிர்ப்பட
பிரிந்த பாதைகளின்
இன்னொரு சங்கமம் இனிக்கும்,
இதயத்துக்குள் ரகசியமாய்,
கள்ளத்தனம் குறுகுறுக்கும்
கபட நாடகத்தில்
மனதை அடக்கும்
மாமனம் நல்ல பூமனம்
வாகை சூடும் வாழ்க்கைக்கு
வரும் மீண்டும் வசந்தம்
மற்றுமொரு ஜன்மத்தில்;
அப்படித்தான் விதியை
மனிதன் வெல்ல முடியும்
சூழலை சூன்யமாய் கொள்ளாத
மனதுக்குள் மட்டும்
நெஞ்சம் மறப்பதில்லை,
நினைவுகளும் அழிவதில்லை..!