அவளின் வெட்கம்
அவள் அசைவினால் காற்று வந்தது
காற்று தொட்டதும் புது வாசம் வந்தது
வாசம் வந்ததும் என் சுவாசம் நின்றது
என் பார்வை அவள் அழகை தின்றது
நான் அவள் அழகை தின்கையில் ஓர் வெட்கம் வந்தது
அதி ரசித்து மெய் மறக்கையில்
அந்த வெட்கம் என்னை விழுங்கி சென்றது