தமிழ் பெண்

அழகிய புருவம் அதன்
வளைவில் குறுகிய மச்சம்...

விழுங்கும் விழிகள் அதற்க்கு
வழி விடும் வாகை மூக்கு...

பாரந்த கன்னம் அதை
பங்கு போடும் பனிதுளி பற்கள்...

நிமிர்ந்த நெற்றி மத்தியில்
மதி கூட்டும் செந்தூரம்...

உலர்ந்த உதடுகள் உடன்
உறங்கும் பற்க்கள்...

சிவந்த நாக்கு சிலிர்க்க
வைக்கும் சிறிய புன்னகை...

மழைமேக கூந்தல் அதில்
மணம் சேர்க்கும் மலர்கள்...

மடலென காதுகள் அதை
உரசி பார்க்கும் கூந்தல் முடிகள்...

வானவில்லின் தூரிகையில்
வர்ணம் பூசிய தாவனி...

மஞ்சள் வெட்கதில் வட்டமிடும்
பாதம்-அதை தொட்டு பார்த்து
சத்தமிடும் கால் கொலுசு...

வளையலோடு இசை பாடும்
அவளின் மெல்லிய வாய்
மொழியால் வார்த்தை ஊமையாகி
தமிழ்மொழியும் தடுமாறும் எங்கள்
தமிழ் பெண்ணை பார்கையில்.....

எழுதியவர் : ஆ.பாலமுதன் (11-Jul-10, 10:48 pm)
சேர்த்தது : பாலமுதன் ஆ
Tanglish : thamizh pen
பார்வை : 931

மேலே