காதல் பாடல்
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண் : இமை மூடினால் அன்பே உன் இதழ் தெரியுதே
இமை போலவே அதுவும் ஒற்றி திறக்குதே
இதழ் ஓரமாய் என் இதயம் இயங்குதே
நீ உதிர்க்கும் மூன்றேலுதிலே என் முக்தி உறைந்துள்ளதே
பெண் : இளமை முழுதும் என் இடை ஏந்துமே
நீ சொக்கி விழும் முன் என் மடி உனைத்தாங்குதே
மனதில் நீ இருப்பதால் நாளும் என் நெஞ்சம் பெருகுதே
ஏங்கிச் சாவுதே என் தேகம் இளைக்குதே
ஆண் : சொல்லாமல் சொல்லும் உன் காதல் கண்ணும்
மின்னுதே தினமும் மின்னுதே எனை கொல்லாமல்
கொல்லுதே அணுஅணுவாய் கொல்லுதே
பெண் : சொன்னால் தானோ என் ஏக்கம் தீருமோ
இனிமை சேருமோ இன்பம் கிடைக்குமோ
நாளும் பொழுதும் நம் உறவு வளருமோ
இத்தகு காதல் மிஞ்சுமோ
ஆண்: அடி பேதை பெண்ணே பதில் சொன்னால்
தானே இருகரம் சேருமே இதழ் கோரும்
இனிமைகள் ஒவ்வொன்றாய் உன்னை சேருமே
பெண் : அட காதலா காதலா காதலா இன்னும்
வார்த்தைதான் தேவையா தேவையா தேவையா
வாடா மன்மதா எனை ஆட்கொள்ள மிச்சம் விட்டு
போகாதே என்றும் எனை விட்டு நீங்காதே
ஆண் : அடி காதலி காதலி காதலி எனை காதலி காதலி காதலி
உயிராக என்றும் உன்னுடன் இருப்பேன் உனையன்றி
ஓர் உறவும் நான் கண்டிடமாட்டேன் என் காலம் உள்ளவரை
உன் துணையாய் நான் இருப்பேன்
(குறிப்பு : சகோதரர் முஹமத் பாடல் மேல் ஈர்ப்பு கொண்டு கவியாய் ஒரு காதல் படலை இயற்றி உள்ளேன் இதுவே ஏன் முதல் பாடல்... என் முயற்சிக்கும் கற்பனை திறனையும் வளர்க்கும் எழுத்து ஊடகத்திற்கும் என் நண்பர்களுக்கும் என் நன்றிகள் )