ஆவிகள் உண்டா-நாகூர் லெத்தீப்

சிலபேர்
நம்புகிறார்கள்
நீ நம்பவில்லை
எதனால்............!

கண்களுக்கு
தெரியாத மாய
தோற்றம்
உனது அருகே.......!

இதோ
தெரிகிறது - பிறகு
மறைகிறது
எல்லாம்
பொய்தானே.......!

உயிருக்கு
உருவம் ஏது
மனிதா இதுவும்
உண்மையாக
இருக்கலாமே......!

படைப்புகள்
பலவிதம்
அதில் - இதுவும்
ஒரு வகை.........!

வார்த்தையால்
தெரிவது அல்ல
உணர்வால்
மட்டுமே
விளங்க முடியும்
இவர்களை.........!

நாம் பார்க்க
இயலுமா
அவர்கள் உன்னை
பார்கிறார்களே
அது உனக்கு
தெரியுமா.........!

தேடுதல்
தொடர்கிறது
உண்மை
விளங்காமலே
மறைகிறது
வாழ்கிறது
நம்மோடு என்றும்.........!

எழுதியவர் : latif (19-Jan-16, 1:38 pm)
பார்வை : 56

மேலே