எங்கே செல்வது-நாகூர் லெத்தீப்
விடியலிலும்
விடியாது
தருணம் எங்களுக்கு........!
உறவுகள்
இருந்தும்
தொலைந்து போனது
ஏனோ.........!
யார் செய்த
சதி திட்டம்
எங்களை சோதிப்பது.........!
மரணம் எந்த
இடத்தில் தருணம்
தெரியாது
செல்கிறோம்..........!
முகம்
தெரியாது
யார் என புரியாது
உதவி தேடுகிறோம்........!
சொந்த
மண்ணை
பறிகொடுத்து
அனாதையாக
செல்கிறோம்........!
நாங்கள் யார்
என்று தெரிகிறதா
எங்கள் நிலை
எதுவென்று
புரிகிறதா...........!
விடை
பெற்று
செல்கிறோம்
விடை தெரியாமல்........!