வாழ்க்கை

வாழ்க்கை

துயில் அறியா இரவுகளில்
துக்கம் வந்து நம்மைப்பின்ன
கூடையாகிப் போனது..
மனம் ஏனோ
குப்பை கூடையாகிப் போனது..
சிந்திக்காத தருணங்களில்
சிவப்பு நிறம் சிகரம் தொட
கோபமாகிப் போனது..
பிறர் மனம் வாடும்
கொடுமையாகிப் போனது..
வாசிக்காத வாக்கியங்கள்
நேசிக்காத நிமிடங்களில்
நீளமாகிப் போனது..
விட முடியாமல்
நீளம் கூடிப் போனது..
தேடாத உறவுகள்
தேடி வந்து பார்க்கும் போது
ஏக்கம் நீங்கிப் போனது..
சூது நிறைந்தோரால்
மனவீக்கம் கூடிப் போனது..
சக்திக்கு மீறிய சக்தியொன்று
அதிகாரத்தை காட்டும்போது
மனம் இறையைத் தேடித் போனது..
சிலர் இல்லை என்றாலும்
வாழ்க்கை இருக்கென்றே சொன்னது..

எழுதியவர் : தீபாகுமரேசன் (19-Jan-16, 1:19 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே