விடைகள் வீணாகபோனதே
பாதையை தேடுவதிலேயே என்
பயணம் முடிந்தது...
பார்வையை இழந்த பின்புதான் என்
இரவே விடிந்தது...
இலக்கின் தூரம் மாறிலியானது...
இமையின் ஈரம் மார்பை தொட்டது...
துன்பங்கள் துளிர்விட்டு என்
இன்பங்களுக்கு ஈம சடங்கு செய்கிறது...
ஏன் இந்த நிலை என்று எண்ணும் போது
என் தாமதம் தெரிகிறது...
கேள்விகளை வெகுநேரம் காத்திருக்க வைத்த
விடைகள் வீணாகபோனதே...