இரட்டைக் குட்டிகளுக்கு இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஒற்றைச் சிற்பியில் இருந்து வந்த
இரட்டை நல் முத்துக்களே !
சினஞ்சிறு சீரக மணிகளாய்
சித்திரையில் பிறந்த செல்வங்களே !
மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிதென
அமுத மொழி அழுகையாலும்,
இன்னிசையாய் ஒலிக்கும் மழலையாலும்
பரவசப் படுத்தும் பட்டு குட்டிகளே !
ஆதவனும் நிலவும் அடுத்தடுத்து நடக்கும்
அதிசயத்தைக் காணும் பாக்கியம்
அகிலும் சந்தனமும் ஒன்றாய் வளர்ந்து
அருமணம் தவழுது அனுதினம் !
அத்தனை அத்தனை ஆனந்தத்தையும்
அள்ளித் தரும் அரும்பு முல்லைகளே
ஒன்றாய் ஜனித்து ஒன்றாய் பிறந்து
ஒன்றாய் வளரும் ஒற்றுமையின் சின்னங்களே !
இரண்டாம் ஆண்டில் அடிவைக்கும் சிட்டுக்கள்
இமயமென வளர எங்கள் வாழ்த்துக்கள் !
இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ்க !
இணையற்ற பெயர் பெற்று வளர்க !
பிணி இல்லா தேகமும், பார் புகழும் அறிவும்,
பறந்து விரிந்த மனமும், பசிக்கு உதவும் குணமும்,
பளிங்கு போல் ஜொலித்திடும் அழகும்,
பகையை மறக்கும் நற்பண்பும் பெற்று
பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் !!