நீண்ட தூக்கம்

அதிகாலையில் பள்ளிக்கு கிளம்பென
அம்மா அன்புடன் எழுப்பையில்
அரை மணி நேரம் கிடைக்காதா என
அரைத் தூக்கத்தில் விம்பும் மனம்

அழகிய கல்லூரி நாட்களில்
அலாரம் துயிலை கலைக்கையில்
அந்த சின்ன முள்ளை பின்தள்ளும் ஒரு
அதிசயம் நிகழ்ந்திட ஏக்கம் தினம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கால நீட்டிப்பை
ஆசிரியர் சூத்திரங்களால் விளக்கையில்
ஆற்றல்மிகு அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று
ஆதவன் உதிப்பதை ஒத்தி வைக்க தோன்றும்

அறியா வயதின் நிகழாத விந்தைஅது
அறிவியலால் முடியாதென நான் வியந்தது
அத்தனை எளிதாய் இன்று அரங்கேறியது
அட - டே லைட் சேவிங்க்ஸ் முடிந்தது!!

எழுதியவர் : ரம்யா ரெங்கராஜன் (20-Jan-16, 1:12 am)
Tanglish : neenda thookam
பார்வை : 138

மேலே