எழில் மிகு யூட்டா

பனி காலத்தில் பார்த்தால்
பளிங்காய் ஜொலித்து
பரவசப் படுத்துகிறாய் !

வசந்த காலம் வந்துவிட்டால்
வாசனையோடு மலர்ந்து
வழி எல்லாம் அலங்கரிக்கிறாய் !

இலையுதிர் காலத்திலோ - உன்
இணையற்ற வண்ணங்களால்
இதயம் கவர்கிறாய் !

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாய்
ஒய்யாரமாய் நிற்கும் மலையே - நீ
ஒற்றை நொடியில் புத்துணர்ச்சி தருகிறாய் !

அழகிய அருவிகளும்,
அமைதியான ஏரியும்
அரை மணித் தொலைவில் இருப்பதால்
அருகாமையில் சொர்க்கம் !

இயற்கை எழில் சூழ் யூட்டா
இத்தனை அழகைக் கொண்டு - எங்கள்
இயல்பான நாளையும்
இன்பமானதாய் மாற்றுகிறாய் !

விடியல் ஒவ்வொன்றையும்
வித்யாசமான தாக்கி
வசிப்போர் வாழ்வில்
வண்ணம் சேர்க்கிறாய் !!

எழுதியவர் : ரம்யா ரெங்கராஜன் (19-Jan-16, 11:34 pm)
சேர்த்தது : ரம்யா ரெங்கராஜன்
பார்வை : 89

மேலே