நம் நாட்டில்

நம் நாட்டில்......

எங்கு சுற்றினாலும் எப்படிச் சுற்றினாலும் நம்மைச் சூழ்ந்த வாழ்வின் சாபக்கேடுகளை, சமூகத்தின் அவலங்களை மூன்றே மூன்று வழிகளில்தான் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒன்று எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவது.

அடுத்தது, தத்துவம் பேசித் திரிவது.

இன்னுமொன்று மதம், ஜாதி, இனம், மொழி என்ற போர்வைகளுக்குள் ஒளிந்து கொள்வது.

(சாதாரண குடிமக்கள் முதல் ரகம். (இதில் தற்கொலை செய்து கொள்பவர்களும் அடக்கம்). போராளிகளும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் இரண்டாவது ரகம். அரசியல்வாதிகள் மூன்றாவது ரகம்.)

ஆனாலும் அவலங்களும், சாபக்கேடுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (20-Jan-16, 5:49 am)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : nam naattil
பார்வை : 165

மேலே