சைகை

எழுத்து ஒவ்வொன்றையும்
..
உச்சரிக்கவும் ,எழுதவும் ..
கற்றுக் கொண்ட போது..
..
அடுத்த கட்டமாய்
வார்த்தைகள் வந்து விழுந்த போது ..
..
அதற்குப் பின்
வாக்கியங்கள் அமைத்த போது ..
..
பேசவும் , எழுதவும்
முடியும் என்றான போது ..
..
உன்னை சந்தித்தேன் ..பழகினேன்..
காதலித்தேன் ..என் உயிரெழுத்து
நீதான் என நினைத்தேன்..
..
என் எண்ணங்கள் அத்தனையும்
மெய்யெழுத்து என்பதால்
உன்னிடம் தெரிவித்தேன் ..காதலை!
..
பதிலாக ..உனது ஒரு சொல்
எனது தலை எழுத்தை மாற்றும்
என்று நினைக்கவில்லை..
..
இப்போது..
எந்த ஒரு எழுத்தும் ..
எனக்கு எழுதத் தெரியவில்லை ..!
..
அத்தனை எழுத்துக்களின் மீதும்
உன் மை..கொட்டியதே
உண்மை !..
..
சைகையால் சொல்கிறேன் ..
நீ..
"நல்லா இரு!"

எழுதியவர் : கருணா (21-Jan-16, 11:47 am)
Tanglish : saikai
பார்வை : 223

மேலே