குழி பறிக்கும் சாத்திரத்தைக் குப்பையில் போட்டாலென்ன - - - - சக்கரைவாசன்
குழி பறிக்கும் சாத்திரத்தைக் குப்பையில் போட்டாலென்ன ?
****************************************************************************************************
இழிதொழிலால் பொருளீட்டி எந்நாளும் பொய் பேசிப்
பழிபாவம் செய்தோரும் பகட்டோடு வாழ்ந்திருக்க
விழிதிறந்து பார்த்திதனை வினைப்பயனென்று ளம்பொறுக்க
குழிபறிக்கும் சாத்திரத்தை குப்பையில் போட்டாலென்ன ?