இறைவனே ஏங்குகையில்

இறைவனே ஏங்குகையில் !

தனக்கிணை படைப்பினை
படைத்தான் இறைவன்
தாயென்று சொன்னான்
இறைவன் !

நானும்தான் படைக்கிறேன்
தாயும்தான் படைக்கிறாள்
நானும் தெய்வம்தான்
தாயும் தெய்வம்தான்

தாய்தன்னின் தாள்தொழு
தள்ளிநின்று கண்டுவிட்டு
தாய்க்கு சேயாக மாறவே
தணியா தாகமென்றான்
இறைவன்!

இறைவனே ஏங்குகையில்…
இகலோகத்தில்……! ?

---- கே. அசோகன்

எழுதியவர் : கே. அசோகன் (21-Jan-16, 10:26 pm)
பார்வை : 87

மேலே