ஒரு நிழல் பொழுதில்
ஒரு நிழல் பொழுதில்
ஒரு இலைச்சருகும்
நீள் இறகும்
உதிர்ந்து நிற்கும்
சாலையோரத்தில்
ஓய்வெடுக்கும் பயணியிடம்
சொல்கிறது.
குளிர்கானப் பறவையின்
தோகை கடந்த தொலைவையும்...
நெடில் மரத்தின்
நோன்பிருக்கும் பெருநிழலையும்...
இலகுவாக்கிக் கொண்டு பறக்கும்
எளிமையையும்...
ஈர்ப்பை துறந்தபின்
காற்றுடன் பேசும்
ரிஷி...
பூஜ்ஜியத்தின் மொழியில்...
-பூபதிராஜ்
புகைப்படம் அண்ணன் சிரட்டை சிற்பி ஆனந்த பெருமாளின் கலைவடிவம்.