மாற்றம்…

அடடா,
அகிலத்து மாந்தரெல்லாம்
ஆசை துறந்திட்டார்,
அன்பைத் துணைகொண்டார்..

மாறிவிட்டனர் மனிதர்கள்,
வேறுபாடுகள் இல்லை
வெட்டுகுத்துகளும் இல்லை,
எங்கும் எதிலும் சமாதானம்..

மனிதனிடம் நோய்நொடி இல்லை
மரணமும் இல்லை அவனுக்கு,
நிரந்தரமாகிவிட்டான் மண்ணில்..

இருந்துகொண்டே கனவுகாண்கிறார்
புத்தர்,
இதழில் புன்னகை மிளிர…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Jan-16, 7:17 am)
பார்வை : 104

மேலே