இயற்கை

இறைவனின் பரிணாமமே !
இயற்கைக்கு ஆதாரமானாய் !!

இயற்கையின் பரிணாமமே !
புவிக்கு ஆதாரமானாய் !!

புவியின் பரிணாமமே !
வாயுக்களுக்கு ஆதாரமானாய் !!

வாயுக்களின் பரிணாமமே !
தாவரங்களுக்கு ஆதாரமானாய் !!

தாவரங்களின் பரிணாமமே !
விலங்குகளுக்கு ஆதாரமானாய் !!

விலங்குகளின் பரிணாமமே !
மனிதனுக்கு ஆதாரமானாய் !!

மனிதனின் பரிணாமமே !
செயற்கைக்கு ஆதாரமானாய் !!

செயற்கையின் பரிணாமமே !
இயற்கை அழிவிற்கு ஆதாரமானாய் !!

இயற்கை அழிவின் பரிணாமமே !
புவி அழிவிற்கு ஆதாரமானாய் !!

இறைவனின் முதற்படைப்பு இயற்கையே !
எதையும் நீ ஆக்கவே செய்தாய் !!

மதிகெட்ட மானிடன் உன்னை
காக்க மறந்தும் மன்னித்தாயே –அவனே
உன்னை அழிக்க முற்படும் தருணம்
புவி உயிரனைத்தும் அழிக்கத்
துணிவு கொண்டாயோ உன்னைக் நீ காக்கவே !.........

*************************தஞ்சை குணா*******************************

எழுதியவர் : மு. குணசேகரன் (22-Jan-16, 9:57 am)
பார்வை : 345

மேலே