கலியுகம்

கலியுகம் கண்டேன்!
கலியுகம் கண்டேன்!
ஆண் பெண்ணாகக் கண்டேன்
பெண் ஆணாகக் கண்டேன்
ஆணும் ஆணும் சேரக்கண்டேன்
பெண்ணும் பெண்ணும் சேரக்கண்டேன்


கலியுகம் கண்டேன்!
கலியுகம் கண்டேன்!
கூட்டுக்குடும்பம் அழியக்கண்டேன்
பச்சை வயல்வெளி மறையக்கண்டேன்
காதலின் புரிதல் மாறக்கண்டேன்
காமத்தின் வெறி பரவக்கண்டேன்

கலியுகம் கண்டேன்!
கலியுகம் கண்டேன்!
கல்வியின் தரம் குறையக்கண்டேன்
தர்மத்தின் சிரம் தாழக்கண்டேன்
இறையன்பு யாவும் குறையக்கண்டேன்
ஜாதிக்கலவரம் யாவும் நடைபெறக்கண்டேன்

கலியுகம் கண்டேன்!
கலியுகம் கண்டேன்!
இயற்கையின் விதிமுறை மாறக்கண்டேன்
செயற்கையின் செழுமை ஓங்கக்கண்டேன்
பணத்தின் மோகம் வளரக்கண்டேன்
பாசத்தின் தரம் குறையக்கண்டேன்

கலியுகம் கண்டேன்!
கலியுகம் கண்டேன்!
தொலைதொடர்பு யாவும் வளரக்கண்டேன்
தொழில்போட்டி யாவும் மலரக்கண்டேன்
பாரம்பரியம் யாவும் மங்கக்கண்டேன்
மனிதனின் சுயநலம் மிளிரக்கண்டேன்.

எழுதியவர் : விக்னேஷ் நதியா (22-Jan-16, 8:40 pm)
சேர்த்தது : விக்னேஷ் பழனி
பார்வை : 284

மேலே