வேறு நிலாக்கள் 5 கட்டாரி

பிணவறையில் மனிதம்
********************************

மூட்டையாக அள்ளி
வந்திருந்த
வழிப்போக்கர்களிடமும்...

ரத்தச் சொட்டுகளை
த்சோ...கொட்டிக் கொண்டே
படமெடுத்துக் கொண்டிருந்த
ஏனையோர்களிடமும் ...

துடித்துக் கொண்டிருந்ததை
பதட்டமில்லாமல் கையாண்டும்...
துடிப்பு நின்று விட...

வியர்வை துடைத்தோ
கண்ணாடி கழற்றியோ செய்தியறிவித்த
மருத்துவரிடமும்..

ஒட்டிக் கொண்டிருக்கும்
கொஞ்சூண்டு மனிதம்தான்
பிணவறைக் காப்பாளனிடமும்
இருக்கிறது...!

பின்கழுத்தைச் சொறிந்து
அவன் அதைக் கொன்றுவிடுவதற்குள்
ஒரு குவார்ட்டருக்கான
காசைக் கொடுத்துவிடுங்கள்...!!



-சரவணா (கட்டாரி )

எழுதியவர் : கட்டாரி (22-Jan-16, 8:44 pm)
பார்வை : 222

மேலே