வானவில் வானுக்கழகு
![](https://eluthu.com/images/loading.gif)
வானவில் வானுக்கழகு !
நாணல் நதிகளுக்கழகு!
நல்பேச்சு நாவிற்கழகு!
இமைகள் கண்ணுக்கழகு!
உண்மை தொழிலுக்கழகு
புன்னகை உதட்டிற்கழகு
இன்முகம் விருந்துக்கழகு
தானம் கரத்திற்கழகு
நிதானம் ஆணுக்கழகு
நடத்தல் காலுக்கழகு
தொடுத்தல் விரலுக்கழகு!
வானவில் வானுக்கழகு
மோனம் மௌனிக்கழகு
தோழமை தோள்களுக்கழகு
துடிப்பு வாலிபத்துக்கு அழகு!
அன்பு அன்னைக்கு அழகு
அறிவு தந்தைக்கு அழகு
------ கே. அசோகன்.