வலைதனில் வீழ்தல்
![](https://eluthu.com/images/loading.gif)
வலைதனில் வீழ்தல் !
கண்களிலே மையெழுதும்
காரிகையர் வலைதனில் வீழ்தல்
காதலாகும் !
விரலில் மையெழுதி
வாக்கு வாங்கி வீழ்த்துவதே
அரசியலாகும் !
காதல் என்பதும்
அரசியல் என்பதும்
காட்டு யானைகளை…..
வீழ்த்திடும்
பெரும் பள்ளங்களே ….!
வீழ்வதும்….விழித்திருப்பதும்
அவரவர் சிந்தையிலே…!
---- கே. அசோகன்.